Thursday, October 9, 2014

தன் அடியை தானே வருடி (than adiyai thanae varudi)














மறத் தமிழனுக்கு சூடும் சொரணையும் கொஞ்சம் ஜாஸ்தி தான்! குறுகிய மனப்பான்மையோடு தமிழ் தமிழ் என்று வெறி பிடித்து அலைகிறானே, அந்த சொரணை மிகுந்த தமிழ் தீவிரவாதி! அவனைப் பற்றி தான் இன்றைய நினைவுப் பதிவுகள்! உங்கள் மனம் பரந்து விரியவில்லை என்றால் இந்த வலைப் பக்கத்தை படிக்காதீர்கள்! சூடாவது நன்றன்று என்று ஒவ்வை பிராட்டி பறைந்திருக்கிறாள்! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று நான் கலைஞர் கருணாநிதியை வைய ஆரம்பித்து விட்டேன் என்றா நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு நான் முதல் பத்தியிலேயே ஆட்சேபனை தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழைப் பற்றியோ அல்லது எல்லா தமிழனைப் பற்றியோ  அவதூறு  செய்வதற்காக நான் இதனை எழுதவில்லை! மொழி வெறியை எதிர்த்து ஒரு சின்ன பேனாக் கொடி! அவ்வளவுதான்!

இயற்கையன்னை இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு அளவுக்கு "narcissism" தன்மையை கொடுத்து இருக்கிறாள்! "Narcissism" மாத்திரம் இல்லா விட்டால் இந்த குவலையம் இயங்கா! நாற்றம் பிடித்த அவனவன் அடியை அவனே வருடிக் கொள்ளாவிட்டால்,  அடுத்தவன் வந்தா அடியை வருடி விடுவான்? ஆகையால் தன் சொந்த சரக்கை பற்றி சிலாகித்துக் கொள்வது ஓரளவு தேவையே! அனால் அந்த சுயபுராணம் அளவுக்கு மிஞ்சிய அமிர்தம் ஆகி விடாமல் நாம் எல்லாரும் காத்து கொள்ள வேண்டும்! அதுதான் அவரவர்க்கு நல்லது, இந்த ஞாலத்துக்கும் நல்லது!

குணா படத்தில் கிறுக்கு கமல் சொல்லுவாரே "எங்கப்பன் எனக்கு அசிங்கமான மூஞ்சியை குடுத்துட்டு போயிட்டான்" என்று! ஞாபகம் இருக்கிறதா? எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய அசாதரணமான வசனம் அது. சற்றே நீங்கள் யோசித்துப்  பாருங்கள். தன்னுடைய முகத்தையோ அல்லது தன்னுடைய அப்பனது அசிங்கமான முகத்தையோ பிடிக்கவில்லை என்று எவனாவது லேசில் சொல்லிவிடுவானா? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ஆன்றோர் என்றைக்கோ சொல்லிவிட்டு போய் விட்டனர்! அது ரொம்ப அருமையான வாக்கு! இயற்கையன்னை கொடுத்த "தான்" என்கிற இறுமாப்பும் உள்ளக் கிளர்ச்சியும் எல்லாரையும் பிடித்து ஆட்டத்தானே செய்யும்! அது காக்கையாக இருந்தாலும் சரி, குருவியாக இருந்தாலும் சரி! அவரவர் அடியை அவரவர் வருடிக்கொள்வது  அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது இந்த உலகத்தில்! 

சமஸ்க்ரிதம் பேசுகிறவன் என்ன சொன்னான்? "தன் பாஷை தேவ பாஷை" என்று பறைச்சாற்றிப் பசப்பினான்! கடவுள் என்பது என்ன? வெறும் ஒரு மாய வஸ்து தானே! உண்மையா, பொய்யா? அப்படியே உண்மை ஆகினும் அவர்களுக்கு மொழி தேவையா என்ன? அவர்களுக்கிருக்கிற சக்திக்கு டெலிபதியில் அல்லவா பேசிக் கொள்வார்கள்! ஏதோ முப்பத்து மூன்று கோடி தேவர்களும், கடவுளர்களும், வால்மீகி, வியாசர் இவர்களுடைய மனக் கோட்டையை விட்டு நிஜமாகவே உயிர்த்தெழுந்து வந்த மாதிரியும், அவர்கள் ஒருவருக்கொருவர் சமஸ்க்ரிதத்தில் பேசுவதை இவன் நேரடியாக கேட்டவன் மாதிரியும், அண்டப் புளுகு ஆகாசப்  புளுகு இந்த உலகத்துக்கே புளுகி தொலைத்தான் சிந்து சம வெளிக்காரன்!

திராவிடனுக்கு தான் ஆரியனை பிடிக்காதே! ஆக, விர்ரென்று வீறுகொண்டு கிளம்பினான் மறத் தமிழன்! கைபர் கணவாய் வழியாய் வந்தவன் தான் வந்தேறி என்றால், "Deccan Plateau"வில் இருந்த இவனுடைய சகோதரர்கள் கூட இவன் கண்ணுக்கு தெரியவில்லை! திராவிட பாஷைகள் பல ஆயினும் இவன் ஏதோ திராவிடர்களிலேயே தான் தான் மேலானவன் மாதிரி பீற்றிக் கொள்ள தொடங்கினான்! தெலுங்கன் மறவன் இல்லையா, கன்னடிகன் சாதரணமானவனா, அல்லது மலையாளத்தான் தான் இதில் எங்கே சேர்த்தி?  தமிழை உசத்தி பேசாதவன் எல்லாம் இவன் விரோதிகள் ஆயினர்! தமிழ் எங்கள் மூச்சு இல்லையேல் உயிர் போச்சு என்று வெட்டிப் பேச்சு வேறு! மனதில் ஏற்க்கனவே இயற்கை கொடுத்த "narcissism" தீயை கொழுந்து விட்டு எரியச் செய்தான்!

தமிழன்னை எத்தனை வளமையானவள்! வஞ்சனை இல்லாமல் வாரி வாரி கொடுத்தாள்! தாய்தகப்பனை சட்டென்று சுற்றி வந்த பால விநாயகரின் புத்திசாலித்தனம் கொண்ட ஆங்கிலேயன் 26 எழுத்துக்களை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறான்! முக்குமுக்கென்று முக்கி முனகி முருகர் மாதிரி உலகம் முழுவதும் மயில் மீதமர்ந்து சுற்றி வந்தும், பெரிய பெயர் ஒன்றும் கிட்டாது தத்தளித்துக் கொண்டிருக்கிறான் பிரிவினை பேசும் தமிழன்! ஆஹா, உலகத்திலேயே மிகவும் பழமையான மொழி எங்கள் தமிழ் மொழி, இனி அது செம்மொழி என்று மார் தட்டுவான், ஆனால், அது வளர விடாது எல்லா காரியத்தையும் துச்சன் போல செய்து தொலைவான்! 247 எழுத்துக்கள், எண்ணிக்கையில் மிகுதியாயினும், அருமையான இலக்கியங்கள் நிறைந்திருந்தும்,  அதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் சிரைத்துக் கொண்டு இருக்கிறான் நம் வீரத் தமிழன்!

அனால் இவனின் "narcissism" புத்தியில் ஒன்றும் குறைவு இல்லை! தமிழ் தான் உசத்தி மற்றதெல்லாம் தாழ்த்தி என்று பேசுவான்! நடு நடுவே "தமிழ் எங்கள் மூச்சு" என்று கொக்கரிப்பான்! சான்றோன் தான் முன்னமே சொல்லிப் போய் விட்டானே! குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லையென்று! கிணற்று தவளையான இவனது உலக ஞானமும் அப்படியொன்றும் மிதமிஞ்சியது இல்லை! குண்டு சட்டியில்  குதிரையை ஓட்டி விட்டு ஏதோ எல்லா மொழிகளையும் கரைத்து குடித்து ஏப்பம் விட்டவன் மாதிரி ஒரு அலட்டல் காட்டுவான்! நல்ல கருத்து உள்ள மாதிரி எதையாவது தமிழில் ஒரு பக்கத்துக்கு எழுதி காண்பியடா பார்க்கலாம் என்றால், அதற்க்கும் அறிவில்லை இந்த மடத் தமிழனுக்கு! நூற்றுக்கணக்கான பாஷைகள் உள்ள உலகத்தில் நீ எத்தனை பாஷை கற்றிருக்கிறாய் என்றால், "வாளைப் பளத்தை" கூட "வாழைப் பழம்" என்று சரியாக கூற தெரியாத இந்த ஞானசூனியம் என்னதான் சொல்லுவான்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புறநானூறு காலத்திலேயே கணியன் பூங்குன்றனார் சொல்லி வைத்தார்! தன் ஊரில் எவனாவது வந்து அவன் மொழி பேசினால் தமிழன் வெகுண்டு எழுவான்! அனால் தனக்கு வேணுமென்றால் துட்டு சம்பாதிக்க என்னவோ இந்த தமிழின பாதுகாவலன் திராவிட அன்னையை அம்போ என்று நட்டாற்றில் விட்டுவிட்டு கப்பலேறி வெளிநாடு போக தயங்க மாட்டான்! அங்கு போய் தமிழ் காலனிகளை ரகசியமாய் chinatown மாதிரி நிறுவி வைப்பான்! வெளிநாட்டில் ஸ்தாபித்த இவன் குடும்ப சந்ததியில் வெள்ளைக்காரன் சம்பந்தம் செய்து மருமகளாகவும் மாப்பிள்ளையாகவும் வீடு புகுந்து வளைய வந்த பின்னும் இவன் "தமிழ்  தமிழ்" என்று தன் பழம் பெருமையைப்  பற்றி பேசிக் கழுத்தறுப்பான்! நரை கூடி கிழப் பருவம் ஏய்தி, குழந்தைகள் மற்றும் பெயரன் பெயரத்திகள் எடுத்த பின்னும் கையளவு மனதை சற்று விஸ்தாரப் படுத்திதான் பார்போமே  என்று எத்தனிக்க மாட்டன் இந்த அறிவிலி!

வெளிநாட்டிலேயே வளர்ந்த இவன் குழந்தைகள் தமிழ் பேசாமல் போய் விந்து விரயமானாலும் இவன் "தமிழ் எங்கள் மூச்சு" என்பான்! "Narcissism" கரை புரண்டு ஓடும் இவனைப் பார்த்து இயற்கை அன்னை எள்ளி நகையாடுவாள்! இவனின் மொழி வெறியை பார்த்து இவனுடைய குழந்தைகளே இவனை பரிகாசம் செய்யும் நிலை கொணர்வாள்! மகாத்மா காந்தி, மஹாகவி பாரதி மாதிரி குழந்தைகள் உருவான அதே வயிற்றில் இந்த மொழி வெறியன் எப்படியடா உண்டாகினான்! இவனை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக இடையூராது தன்னைத்தானே வைது கொண்டு இயற்கையன்னை பரிதாபப் படுவாள் இவன் நிமித்தமாக!

பரந்து விரிந்த பூமி மாதா இவனை சுமையென்று நினைக்கத் தொடங்கினாலும் இவன் வெட்கப்பட மாட்டான்! "இத்தனை சிறிய மனதினாய், நீ போ போ" என்று  கூறி இந்த உலகம் எள்ளி நகையாடினாலும் இவன் கவலைப்பட மாட்டான்! இடுகாடோ, "நீ வா வா, உன்னை மாதிரி சின்ன புத்திக்காரனை சுட்டு போசுக்க காத்திருக்கிறேன்" என்று  குதூகலித்தாலும் மானரோஷமற்ற இவன் நிலை தடுமாற மாட்டான்! யாரைப் பற்றியும் கவலை படும் ஜாதியில்லையே இந்த மொழி வெறியன்! அவனுக்கு தேவை "தான்" என்கிற அவனின் ஆழ்மனதின் சந்தோஷம்! Self-Gratification! தனக்கு தானே சிலை வைத்துக் கொள்வான்! தன் பெயரை ஊரில் ஒரு பகுதிக்கு வைத்து அழியாப் புகழடைய முயற்சி செய்வான்! தனக்கு தானே விதம் விதமாக பட்டம் சூட்டிக் கொள்வான்! சாப்பிட்டு தூர எறிந்த எச்சில் இலை மாதிரி உயிர் பிரிந்து புழுக்கள் ஊரும் அழுகிய பிணம் ஆகும் வரை தொடரும் இவனின் அட்டூழியங்கள்!

அண்ட  கோடி சராசரத்தில் ஒரு சின்ன துளியான இந்த தமிழ் ஐயனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா? பட்டினத்தார் சொன்ன காற்றடைத்த பை ஞாபகம் இருக்கிறதா? அமரர் ஆனப் பின்னர் இவனை விட்டு பிரிந்த இவன் உயிரை இயற்கையன்னை என்ன சும்மாவா விட்டு விடுவாள்? தெலுங்கோ, அல்லது கன்னடமோ பேசும் வேறொரு பையில் இவன் காற்றை அடைத்து திரும்பவும் இதே உலகத்துக்கு இவனே அறியாதவாறு இவனை அனுப்பி வைப்பாள் அந்த தாய்! இவனும் போன ஜென்மத்தில் தான் யாராக இருந்தோம் என்று அறியாது புதிய மொழி வெறி பிடித்து அலைவான்!

தன் அடியை தானே வருடிக் கொள்ளும் விசாலமற்ற நார்சிச குழந்தையே! வேற்றூரில் இருந்து வந்த வீர மாமுனிவன் மாதிரி தமிழ் படித்த மற்றவன் சொல்லட்டும்! அதில் கொஞ்சம் சத்தியத்  தன்மை இருக்கலாம்! அதுவரைக்கும் உன் சங்கை நீயே பூம் பூம் என்று ஊதுவதை நிறுத்தித் தொலை!

No comments:

Post a Comment